Skip to main content

சுயநலமாக சிந்திப்பது நல்லதா

சுயநலசிந்தனை மன அழுத்தத்தை குறைக்கும்:

இன்றைய தினங்களில் மனிதர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் போக்குவதற்காக பலரும் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். சிந்தனைப் பேச்சாளர்களின் உரை கேட்பது, சுற்றுலா சென்று வருவது, பலவிதமான யோக மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருவது, மியூசிக் தெரப்பி போன்று நிறையவே கையாள்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் மனஅழுத்தம் குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தீர்வாக முதன்மையான காரணம் “சுயநலமாக சிந்திக்க வேண்டும்” என்பது தான்.
உண்மையில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் அதிகம் சிந்தப்பது, ஆனால் அதிகம் சிந்த்தால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.

பலருக்கும் இது ஆச்சரியம் ஊட்டும் செய்தியாக இருக்கலாம். ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. இதை விளக்கமாக கூறுவதற்கு ஒரு உதாரணம் தருகிறோம்.

இறைவன் கலியுக இறுதியான இந்த சமயத்தில் உலகை புதுப்பிக்க அழுக்கான மனித ஆத்மாக்களை தூய்மையானர்களாக்க அவர் கற்றுத் தரும் இராஜயோகத்தின் மூலம் அவர் கூறும் முதன்மையான அறிவுரை காமத்தை உங்கள் எண்ணங்களில் கூட இல்லாத அளவு என்னை நினைவு செய்து எரித்துவிடுங்கள் என்பது. ஏன்னென்றால் காமம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் இது மனிதனின் மிகப்பெரிய எதிரி எனக் கூறுகிறார். இறைவனின் செய்தியை பலருக்கும் கூறுகையில் சகோதரியிடம் விவாதம் ஏற்பட்டது. விவாதத்தில் உடலைப் பார்த்து வரும் காதலும் காமம் தான் என்று கூறியபோது அவர் அதிர்ச்சியடைந்தார், அவரும் காதல் திருமணம் செய்தவர். இதை அவரால் ஏற்கொள்ளவும் முடியவில்லை. அவருக்கு ஒரு உதாரணம் கூறினேன் நான் கல்லூரி பயின்று வருப்போது ஒருவர் மீது காதல் கொள்கிறேன் ஒருதலையாக. அவருடன் என்னுடைய வாழ்க்கைப் பயணம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கற்பனை உலகில் மிதக்கிறேன் அவரிடம் காதலை சொல்லாமலேயே கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அவரை பற்றியும் மறந்துவிட்டேன்.

பிறகு அலுவலகம் செல்கிறேன் அங்கு என்னிடம் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்துகிறார் கன்னியமானவராக எனக்கும் பிடிக்கிறது. பிறகு திருமணத்திற்கு இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை காதல் முறிந்தது. பிறகு வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கிறார்கள். இங்கு தான் அந்த பெண் சுயநலத்தை பற்றி சிந்திக்கிறாள்.“நான் ஏற்கனவே ஒருவரிடம்  எவ்வாறு திருமண வாழ்வை எடுத்து செல்வது என  மனதால் வாழ்ந்து முடித்துவிட்டேன், பிறகும் இரண்டாவதாக முன்பு ஒருவருடன் கற்பனையில் வாழ்ந்த நாட்களை மறந்துவிட்டு வேறு ஒருவருடனான வாழ்வை கற்பனையில் வாழத் தொடங்கிவிட்டேன், இப்போது மீண்டும் ஒருவரை மனதால் நினைத்து நிஜத்தில் அவருடன் இல்லற வாழ்வை தொடங்குவது நான் செய்யும் விபச்சாரமாகதா?” என்று.
இந்த கதையை அந்த சகோதரியிடம் கூறியதும் அவர் என்னிடம் “ நீ ரொம்ப யோசிக்குற, இந்த மாதிரிலாம் யோசிச்சா யாருமே வாழ முடியாது, இவ்வளவு யோசிப்பது நல்லதல்ல” என்று. அதன் பிறகு சிறிய விவாதத்திற்கு பிறகு தன் குடுப்பதினரை பற்றிக் கூறினார் “என் மாமியார், மாமனார், நாத்தனார் என அவர் இப்படி செய்யலாமே, அவர் அப்படி செய்திருக்கலாமே என் மட்டுமே குறை சொல்றாங்க” என மற்றவர்களைப் பற்றியே அவர் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் சரி செய்துக் கொள்ள வேண்டியதை பற்றியே மனதில் அசைப் போட்டு போட்டு தன்னை தானே வறுத்தி பேசினார்.

இங்கு மேல் கூறியவற்றை பார்க்கும்போதே ஓரளவு புரிந்திருக்கும் “சுயநலம்” என்று எதைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்று.
இருப்பினும் அதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம். சுயநலமாக சிந்திப்பது என்றால் இன்றைய நாளில் நாம் தனக்கென்றும் தன் குடும்பத்தினருக்கு என்றும் பிறரைப் பற்றி சிந்திக்காமல் மற்வர்களுக்கும் வேண்டும் என்ற இரக்க குணம் இல்லாமல் மற்றவர் என்ன ஆனாலும் பரவாக இல்லை நான் மற்றும் என் குடும்பத்தினர் நன்றாக இருந்தால் போது என்று இருப்பது சுயநலம் எனக் கூறுகிறோம்.

உண்மையில் சுயத்தின் நலனைப் பற்றி சிந்திப்பதை தான் இங்கு சுயநலம் எனக் குறிப்பிட்டுள்ளோம். முதலில் கூறப்பட்டுள்ள சுயநலம் வருவதற்கு காரணமாக இருப்பது காமம், கோபம், பற்று, பேராசை, அகங்காரம் என்னும் உடல் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அதில் அதிகம் பாதிப்படைந்தவர்கள் செய்யும் செயல்கள் அவை. இந்த குணங்கள் இல்லாத மனிதர்கள் இன்று உலகலேயே இல்லை. அளவில் வேண்டுமானால் மாற்றம் இருக்கும் ஆனால் அனைவரிடமும் இந்த பூதங்கள் உள்ளன. இந்த உடல் உணர்வுகள் அதிகரித்து வரும் காரணமாக தான் நம்முடைய சிந்தனைகள் நம்முடைய சுயம் அதாவது அகத்தில் இருக்கும் ஒழுக்கம் மற்றும் பண்புகளை உயர்த்த வேண்டும் என்பதை விட்டு விட்டு மற்றவர்கள் என்னிடம் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும் அவர் செய்வது சரியல்ல இவர் செய்வது சரியல்ல என்று நம்முடைய சிந்தனைகள் பிறரிடம் உள்ள குறைகள் என்னும் குப்பைகளை கிளறத் தொடங்கி இன்று பண்பு என்றால் என்பதை மறந்து இந்த குப்பைகளை மட்டுமே கிளறிக் கொண்டு இருக்கிறோம்.

எப்போதும் நான் செய்வது சரியான காரியமா? ஒழுக்கமான காரியமா? மற்றவருக்கோ இல்லை எனக்கோ இது துன்பத்தை தருமா? இதை செய்வதால் என் குணம் என்னும் என்னுடைய தகுதி உயருமா? தாழ்ந்துவிடுமா? என்று இவ்வாறு நம்மை மற்றும் நன்மை சார்ந்துமே நம்முடைய சிந்தனை இருந்தால் புத்தி சரியான முடிவையே எடுக்கும் மனதும் அதைியாக இருக்கும், மனம் மற்றவர்களை சார்ந்த சந்தோஷத்தை தேடி அலையாது.
ஆனால் இவ்வாறு செய்வது கலியுக இறுதியான இந்த நேரத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் குறை மட்டுமே கூறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் யாருக்கும் சுயத்தின் நலனைப் பற்றி சிந்தித்து செயல்பட சக்தி இல்லை. இதை நான் கூட கூறவில்லை மனிதர்கள் தேடியும்  திட்டித்தீர்க்கும் அந்த ஒருவர் அதாவது இறைவனே நேரடியாகக் கூறும் செய்தியாகும். நம்முடைய உண்மையான பண்புகளை இழந்ததே உலகில் அனைத்து தரப்பு மக்களும் துன்பமடைவதற்கு காரணம். இதிலிருந்து மீண்டு வர முதலில் உங்களை நீங்கள் யார் என்று உணர வேண்டும், அதன் பிறகு சத்தியமான என்னை நினைவு செய்ய வேண்டும் இறைவன் கூறுகிறார். நீங்கள் அழியக் கூடிய உடலல்ல அழிவற்ற ஆத்மா(உயிர்) இரு புருவ மத்தியில் ஜெலிக்கும் நட்சத்திர வடிவில் இருக்கும் நுட்பமான ஔியான ஆத்மா. இவ்வாறு தன்னை ஆத்மா என உணர்ந்து உங்கள்(ஆத்மா) தந்தையான என் என்னை இறைவனை(அல்லா/கர்த்தர்/சிவன்) செம்பொன் நிறமான ஔி உலகில் நுட்பமான நட்சத்திர ஔியாக அன்பாக நினைவு செய்ய செய்ய உங்கள் பண்புகளை உயர்ந்தி உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கான சக்தி கிடைக்கும் என உடல் இல்லா இறைவன் இந்த ஞானத்தை நமக்கு அளிப்பதற்காக ஒரு வயோதிகரின் உடலை ஆதாரமாக எடுத்து அவர் வாய் வழியாக ஞான அமிர்தத்தை கொடுக்கிறார்.இதுவே ராஜயோகமாகும். இதன் மூலம் தான் இறைவன் புது உலகை உருவாக்குகிறார். சுய சிந்தனையில் கவனம் கெ ாடுத்து தங்கள் பண்புகளை உயர்வாக மாற்றிக் கெ ாள்பவர்ளே அங்கு நுழைய முடியும

Comments

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

 Tamil Murli 14 July 2023 very powerful - BK Saravana Kumar நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar மூன்றாம் பிறை படம் கமல்ஹாசன் ஸ்ரீதேவி சங்கமயுகத்தில் நமக்கு விக்னங்கள் ஏற்படுத்தும் அஞ்ஞானிகளை பக்தர்கள் என்று நினைக்கலாம்.. ஆனால் ஞானம் எடுத்தவர்களே விக்னத்தை ஏற்படுத்தும்போது அவர்களை என்னவென்று நினைப்பது? எப்படி சமாளிப்பது? BK Varalakshmi

13 July 2023 Murli

 உன் கையை வெட்டி நெருப்பில் போடு நீ செய்த பாவம் அழியும் - BK Saravana Kumar Tamil Murli 13 July 2023 - BK Saravana Kumar பிரம்மா பாபாவே சூர்ய வம்சத்தில் வரமாட்டார். சந்திர வம்சத்தில் தான் வருவார் - BK Varalakshmi சத்தியத்தில் நாம் எல்லோரையும் ஆத்மாவாகத் தான் பார்ப்போமா? - BK Meera ಭಗವಂತ ಅಂದ್ರೆ ಏನು? ಯಾರು? BK Varalakshmi

12 July 2023 videos of BK Saravana Kumar

Tamil Murli 12 July 2023 very powerful - BK Saravana Kumar மன அழுத்தமா? எந்த கடையில விக்கிது? DIG விஜயகுமார் பொன்.மாணிக்கவேல் - BK Saravana Kumar இந்துக்கள் மட்டுமே சொர்க்கத்திற்கு வருவது ஏன்? கடவுளே பாரபட்சம் பார்க்கிறாரா? - BK Saravana Kumar Tamil Murli 11 July 2023 very powerful - BK Saravana Kumar