சுயநலமாக சிந்திப்பது நல்லதா
சுயநலசிந்தனை மன அழுத்தத்தை குறைக்கும்: இன்றைய தினங்களில் மனிதர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் போக்குவதற்காக பலரும் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். சிந்தனைப் பேச்சாளர்களின் உரை கேட்பது, சுற்றுலா சென்று வருவது, பலவிதமான யோக மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருவது, மியூசிக் தெரப்பி போன்று நிறையவே கையாள்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் மனஅழுத்தம் குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தீர்வாக முதன்மையான காரணம் “சுயநலமாக சிந்திக்க வேண்டும்” என்பது தான். உண்மையில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் அதிகம் சிந்தப்பது, ஆனால் அதிகம் சிந்த்தால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம். பலருக்கும் இது ஆச்சரியம் ஊட்டும் செய்தியாக இருக்கலாம். ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. இதை விளக்கமாக கூறுவதற்கு ஒரு உதாரணம் தருகிறோம். இறைவன் கலியுக இறுதியான இந்த சமயத்தில் உலகை புதுப்பிக்க அழுக்கான மனித ஆத்மாக்களை தூய்மையானர்களாக்க அவர் கற்றுத் தரும் இராஜயோகத்தின் மூலம் அவர் கூறும் முதன்மையான அறிவுரை காமத்தை உங்கள் எண்ணங்களில் கூட இல்லாத அளவு என்னை நினைவு செய்து எரித்துவிடுங்...